தமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தல் இந்த மாதம்
24ம் தேதி நடக்க உள்ளது. வாக்கு சாவடிகளில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுவது வழக் கம். இவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர்
தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே
திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி
வகுப்புகள் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து
தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலை என அனைத்து
பள்ளி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
மீண்டும் இந்த பயிற்சி வகுப்புகள் இன்றும்(3ம்
தேதி), நாளை மறுதினம்(5ம் தேதி) நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை
10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக் கிறது. இன்று நடைபெறும்
பயிற்சிக்கு தேர்தல் அதிகா ரிகள், பெரும்பாலான பள்ளிகளின் அனைத்து
ஆசிரியர்களுக்கும் அழை ப்பு விடுத்துள்ளனர். இத னால் திருச்சி மாவட்டத்தில்
பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. இதனால் மாணவர்க ளின்
படிப்பும், பள்ளி வேலை நாட்களை ஏப்ரல் மாதத்திற்குள் முடிப்பதில்
ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில்; பள்
ளிகளில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப் படி அனைத்து ஆசிரியர்க
ளுக்கும் ஒரே நாளில் பயிற்சி வகுப்புகளுக்கு தேர் தல் அதிகாரிகள் வரச்
சொல்வதால் இன்று பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த
மாதத்தில் தேர்தலுக் காக 3 நாட்கள் ஏற்கனவே விடுமுறை என அறிவிக்கப்
பட்டுள்ளது. இதனால் பிப் ரவரி மாதம் முதலே அனைத்து சனிக்கிழமைக ளிலும்
பள்ளிகள் இயங்கு கிறது. தேர்தல் பயிற்சி வகுப்புகள் இது வரை காலை முதல்
மதியம் வரை நடந்தது. ஆனால் தற் போது காலை முதல் மாலை நடப்பதால், பயிற்
சிக்கு வந்தால் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. தேர்வு நடைபெ றும்
நேரத்தில் மாணவர் களுக்கு உரிய பயிற்சியளிக்க முடியாமல் ஆசிரியர்கள்
தவிக்கின்றனர். மேலும் விடுமுறையை எப்படி ஈடு செய்வது என்று ஆசிரியர் கள்
புலம்புகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் மாணவர்களின் நலன்கருதி
பயிற்சி நேரத்தை காலை முதல் மதியம் என வும், மதியம் முதல் மாலை வரை என 2
பிரிவுகளாக நடத் தலாம்.மேலும் பயிற்சி யில் கலந்து கொள்ளும் ஆசிரியர் களை
அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர் களின் எண்ணிக் கைக்கு ஏற்ப பாதியளவு ஆசிரியர்
களை ஒருநாளும், மீதி ஆசிரியர்களை மற் றொரு நாளும் பயிற்சிக்கு அழைத்தால்
மாணவர்க ளின் படிப்புக்கு இடையூறு ஏற்படாது.
பள்ளி வேலை நாளின் அளவும் குறையாது என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...