வங்கியில், கல்விக்கடன் பெற, பணிந்து போக
வேண்டியது அவசியம் என, வங்கி அதிகாரி குறிப்பிட்டது, புண்படுத்தும் செயல்'
என, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழுவின், முன்னாள் உறுப்பினர்,
மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'வங்கி கடனை பெறுவது எப்படி; வணங்காமுடி
ஆலோசனை' என்ற தலைப்பில், வெளியான செய்தியில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள்
'கல்விக் கடன் பெற, வங்கி அதிகாரிகளிடம், மரியாதையாக நடந்து கொள்ள
வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவறு; ஆதிதிராவிட மாணவர்களை
மட்டும் புண்படுத்தும் செயலாகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...