'ஆங்கில புலமை இல்லாததால் தான், சீனர்களால், ஐ.டி., துறையில்
ஜொலிக்கமுடியவில்லை. நம் நாட்டினர், ஐ.டி., துறையில் வெற்றி பெற, ஆங்கில
மொழியே முக்கியகாரணம்,'' என, கல்வியாளர் சுஜித்குமார் பேசினார்.
'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சியில்,'வேலைவாய்ப்புக்கு தயாராவது
எப்படி' என்ற தலைப்பில், கல்வியாளர், சுஜித்குமார் பேசியதாவது:இன்றைய
காலத்தில், ஆங்கிலத்தின் தேவை அதிகமாக உள்ளது. சீனா, ஜப்பான், ரஷ்யா
போன்றபல்வேறு நாட்டு மக்கள், தாய் மொழியில் படித்து தான், பல்வேறு சாதனை
புரிந்தனர் என, பலரும் நினைக்க கூடும். ஆனால், தாய் மொழியை மட்டுமே பேசி
வரும் சீனர்களால், ஐ.டி., துறையில்ஜொலிக்க முடியவில்லை. ஆனால், நம்
நாட்டினர், ஐ.டி., துறையில் ஜெயிக்க முடிந்தது. அதற்கு,ஆங்கிலமே முக்கிய
காரணம்.
தமிழர்களால், குறிப்பிட்ட மாநிலத்தில், ஆறு மாதம் இருந்தால் கூட, அம்மாநில
மொழியை கற்றுக் கொள்ள முடியும். நமக்கு, மொழிவளம் அதிகம். அதனால் தான்,
ஐ.டி., துறையில் சம்பாதிப்பவர்களை விட, வீட்டில் ஆங்கில வகுப்பு எடுக்கும்
குடும்ப பெண்கள், அதிகளவில் சம்பாதிக்கின்றனர்.ஆங்கிலத்தில், உங்கள்
மொழிப்புலமையை வளர்த்துக் கொண்டால், வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கொட்டிக்
கிடக்கின்றன. உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டியது, நீங்கள். அதனால்,
சுயமாகசிந்தித்து முடிவெடுங்கள். வாழ்வில், நல்ல நிலைக்கு வந்த உடன், ஏழை
குழந்தைகளை படிக்கவைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...