Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சேவை மனப்பான்மையுடன் கழிவறையை சுத்தம் செய்யும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்

        விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் கணக்கன்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக யூஜின் புருனோ பணியாற்றி வருகிறார். இவர் சேவை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது இவர் பணியாற்றும் பள்ளியின் மாணவர்கள் கழிவறையை இவரே வாரம் ஒருமுறை சுத்தம் செய்கிறார். அவரை அனைவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.

            இவரின் சேவையை பல்வேறு அமைப்புகள் பாராட்டி உள்ளன. சிறந்த ஆசிரியருக்கான ஏர் இந்தியா விருது. சிகரம் தொட்ட ஆசிரியருக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். தான் பணிபுரியும் பள்ளிக்கு தமிழக அளவில் சிறந்த பள்ளிக்கான விருதையும் பெற்றுத்தந்துள்ளார். அந்த ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி கிராம பிரமுகர்களுடன் இணைந்து பாடுபட்டார். இக்கிராம மக்கள் இவரின் சேவைகளை பாராட்டுகின்றனர்.




13 Comments:

  1. ஆசிரியர் பணிய அற பணி அதற்கு உன்னை அர்பணி.உங்கள் பணியை தொடருங்கள் ....... இதை பார்த்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாறடும் ......மிக்க நன்றி பகுத்தறிவாளர் புருனோக்கு...

    ReplyDelete
  2. காணும் போதே கண்களும் உள்ளமும் களிப்படைகிறது. உங்களைப் போன்றோரெல்லாம் என் போன்ற வளரும் ஆசிரியா்களுக்கு வழிகாட்டியாக தென்படுகிறீா்கள். நான் பணிபுரியும் சேத்துப்பட்டு ஒன்றியத்திலும் கூட ஆா்.சி.எம். தொடக்கப்பள்ளி, தத்தனூா் தலைமையாசிரியா் திருமிகு.வின்சென்ட் தங்களைப் போன்றே அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுகிறாா் என்பதை பகிா்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இருவாின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. யூஜின் புருனோ பாராட்டப்பட வேண்டியவர், போற்றப்பட வேண்டியவர். பாராட்டுவோம் போற்றுவோம்

    ReplyDelete
  4. Nalaya Baratham Ungal Kayil Super Sir

    ReplyDelete
  5. There is no word to wish this man i really proud.He become a teacher all of you listen to this man and follow him

    ReplyDelete
  6. முன்மாதிரியான ஆசிரியர். பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. ஆசிரியரின் பணிசிறக்க பாராட்டுகிறேன்.அப்படியானால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும்,வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரும்,கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும்,கல்லூரியில் முதல்வரும்,பல்கலைகழகத்தில் துனைவேந்தரும்,அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சரும் அவரவர் அலுவலகத்தில் இப்பணியை செய்வார்களா?அவரவர் பணியை அவரவர் சிறப்பாக செய்வதே சிறப்பு.இவ்வாசிரியர் செய்யும் பணிக்கு என்று அரசாங்கத்தில் பணிநியமணம் உண்டு.அரசு அதை செய்தால் பல ஆயிரம் குடும்பங்க்களுக்கு வாழ்வுகிடைக்கும்.இப்பணியை ஆசிரியர் செய்தால் பாராட்டு, மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து செய்யச்சொன்னால் ஆசிரியர்களுக்கு தண்டனை என்னடா உலகம் இது!.

    ReplyDelete
  8. Well said Gunasekaran sir...!

    ReplyDelete
  9. Well said Gunasekaran sir...!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive