Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி வரன்முறை இல்லை பரிதவிக்கும் ஆசிரியர்கள்; அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் நிறைவு


      அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் பணியாற்றி வந்த, 271 பேர் பணிநிரந்தரம் செய்யவுள்ளதாக, தமிழக அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் கடந்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
 
              மாநிலம் முழுவதும், மேல்நிலைப்பள்ளிகளில் 3300 தொழில்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், பணி ஓய்வு பெறுபவர்களின் இடங்களை நிரப்பாமலும், புதிய ஆசிரியர்களை பணிநியமனம் செய்யாத காரணத்தாலும், 1000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.அரசு பள்ளிகளில், 2000ம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து, காலியாகவுள்ள இடங்களில், தொழில்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, தற்போது வரை 2000 அல்லது 3000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தன்படி, குறைந்த ஊதியத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.கடந்த 2006ம் ஆண்டில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்த 213 தொழில்கல்வி ஆசிரியர்கள் பணிநிரந்தம் செய்யப்பட்டனர். மீதம் உள்ள, 622 பேர் தகுதியின் அடிப்படையில், படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

          தொடர்ந்து, 2007ம் ஆண்டு முழு தகுதி பெற்ற, 271 ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், பணி நிரந்தரம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும், இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அறிவிப்புகளை வெளியிட வேண்டி, தமிழ்நாடு தொழில்கல்வி ஆசிரியர் கழகம் பல முறை போராட்டங்கள், உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொண்டும் எவ்வித பலனும் அளிக்கவில்லை என்று சங்க நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட தொழில்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''கடந்த 2000ம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். ஊதியம் 3000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. 2007ம் ஆண்டு, பணி வரன்முறை செய்வதற்காக 271 பேர் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு கிடைத்தும், வேறு வழியின்றி அரசை நம்பி கடந்த ஏழு ஆண்டுகளாக காத்துக்கிடக்கின்றோம். குறைந்த ஊதியத்தால், குடும்ப பொருளாதார சூழலில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.'எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதை உணர்ந்து, தேர்வு செய்யப்பட்ட 271 பேரையும், பணி நியமனம் செய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive