Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் அமரும் இடத்தை மணவர்களே சுத்தம் செய்வது மானவர்களுக்கு இழிவா? - சிறப்புக் கட்டுரை


          வகுப்பறை என்பது மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை அறிவையும் புகட்டும் இடமாகும்.தலைமையேற்கும் பண்பு,விட்டுக் கொடுத்தல்,தன்முறைவரும்வரை காத்திருத்தல்,பிறருக்கு உதவிடுதல்,போன்றவற்றை கற்பிக்கும் இடம் வகுப்பறைபயல்லவா! 

        வகுப்பறை சுத்தம் செய்தல் என்பது காலஅட்டவணையின் அடிப்படையில் அனைத்து மாணவர்களும் பங்கெடுக்கச் செய்து தங்கள் இடத்தை தாங்கள்தான் சுத்தம் செய்ய்வேண்டும் என்ற ஒழுங்கைகற்றுக்கொள்கிறான். இதேபோல் தான் மற்ற பணிகளும். சரி அரசின் உத்தரவில் வகுப்பறை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கூறுகிறது.

           மாணவர்கள் அமரும் இடத்தை மணவர்களே சுத்தம் செய்வது மானவர்களூக்கு இழிவா?. எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு என்றால் மாணவர்கள் பள்ளியில் எதை கற்றுக்கொள்ள போகிறார்கள்?. ஆசிரியர்களுக்கு ஒரு உதவியென்றால் மாணவர்கள் உடனே செய்வார்கள் இந்த பண்புதான் பின்னர் சமூகத்திற்கு பயன்படும் ஆசிரியர்களின் சொற்கேலாதவன் சமூகத்தில் யாருடைய சொல்லுக்கு கட்டுப்பட போகிறான்.

         ஆசியர்களால் மாணவர்களூக்கு கொடுக்கப்படும் ஒவ்வொருபணியும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாகத்தான் இருக்கும்.ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் சொந்த வேலைக்காக பணிப்பது தவறுதான். ஆசிரியர்களின் கழிவறையை மாணவர்களைக்கொண்டு சுத்தம் செய்ய சொல்லக் கூடாது. மாணவர்களின் கழிவறையை மாணவர்களால் ஒரு வாளி தண்ணீர் ஊற்றுவதால் மாணவர்களுக்குத்தானே நன்மை. பள்ளிகளில் துப்புறவு பணியாளர் இருந்தால் அவர்கள் சுத்தம் செய்வார்கள், அப்படி பணீயாளர் இருக்கும் இடங்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால் ஆசிரியர்களுக்கு தண்டணை கொடுக்கவேண்டும். அரசு எத்தனை பள்ளிகளில் துப்புரவுபணீயார்களை பணியமர்த்தி உள்ளது. சமீபத்தில் அரசு கல்விச்செயலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒருதகவல் கொடுத்துள்ளது,12,000 க்கும் மேற்பட்ட தொடக்க,நடு நிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் துப்புரவுபணீயாலர்களை பனியமர்த்தி உள்ளதாக.அப்படியானால் அவர்கள் அனைவரும் எங்கே? அரசே முதலில் அவர்களை கண்டிபிடித்து பள்ளிகளில் பணி அமர்த்துங்கள் .பின்னர் உங்கள் உத்தரவுகளை நடைமுறை படுத்துங்கள். ஏசி அறையில் அமர்ந்துகொண்டு உத்தரவுகள் இடுவது எளிது. அதிகாரிகள் தங்களது பணியை சரியாகசெய்து விட்டு உத்தரவுகள் இடுவதே மிகச்சிறந்தது.

Article By Our Padasalai Reader - திரு. D. குணசேகரன்.

நம் பாடசாலை வாசகர்கள் இந்த கட்டுரை குறித்த தங்கள் Comments-களை அவசியம் கீழே வழங்கவும்.




6 Comments:

  1. வாசகர் குணசேகரன் அவர்களுக்கு,

    வாழ்த்துக்கள்! இது ஒரு மிகச் சிறந்த கட்டுரை. தொடர்ந்து இது போன்ற தரமான பல்வேறு கட்டுரைகளை பாடசாலை வலைதள இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தங்கள் அலைபேசி எண்?

    தொடர்ந்து இணைந்திருங்கள் - பாடசாலையோடு.

    By - Padasalai Team Head.

    ReplyDelete
  2. Exactly you are right Mr.Gunasekaran Sir...kattuppaadugal illatha yendha oru kalvi salaiyum futurela indha soceitykku nalla citizengala uruvaakki thara mudiyaathu..

    ReplyDelete
  3. நல்ல கருத்துகள். தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள்.மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
    தமிழில் தட்டச்சு செய்வது சற்று சிரமம்தான். எனினும் பிழையின்றி பதிவு செய்ய முயற்சிக்கலாமே..! நன்றி..
    --- பிரகாஷ்.

    ReplyDelete
  4. பிழையாக தட்டச்சு செய்ததற்கு மன்னிக்கவும்.தூக்கத்தால் நிகழ்ந்த பிழை.இனி இதுபோல் நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்.பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  5. அனைத்து ஆசிரியர்களின் ஆதங்கமும் இதுதான்.பூனைக்கு யார்மணிகட்டுவது ?

    ReplyDelete
  6. nalla news but entha arasiyal vathikkum ,adhigarikalukkum theriya poguthu namma padura kastdam namakku thane therium

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive