திருச்சி, : ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று
முன்னாள் அமைச்சர் நேரு கூறினார்.
திருச்சி தொகுதி திமுக வேட்பாளர்
அன்பழகன் நேற்று திருவெறும்பூர் ஒன்றியம் பழங்கனாங்குடியில் பிரசாரத்தை
துவக்கினார். பிரசாரத்தை முன் னாள் அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்து
பேசுகையில், ‘திருவெறும்பூர் பகுதியில் பாதாள
சாக்கடை திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி - தஞ்சை சாலையில்
சர்வீஸ் ரோடு வசதியை மேம்படுத்த தகுந்த நடவடி க்கை எடுக்கப்பட்டு வரு கிறது.
நரிக்குறவர்களுக்கு நல வாரியம் அமைத்தது திமுக ஆட்சி காலத்தில் தான். பெல்
தொழிலாளர்களுக்கு பிரச்னை வந்த போது அதனை தீர்த்த வைத்தது திமுக தான். திமுக
ஆட்சியில் தான் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. தொழிலாளர்கள் நலனின் திமுக
மிகவும் அக்கறையு டன் செயல்பட்டு வருகிறது.
திமுக ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் பணி
நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது மத்திய அரசு, மாநில அரசு ஒப்புதலுடன் ஆசிரியர்
தகுதித் தேர்வு வாரியம் அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. இதனால்,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பதிவு
செய்து ஆசிரி யர் பயிற்சி படிப்பு படித்த ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக
உள்ளது. இந்த தகுதித் தேர்வை ரத்து செய்ய திமுக தகுந்த நடவடிக்கை எடுக்கும்
என்றார்.
பின்னர் வடக்கு தேனீர்பட்டி, திருவெறும்பூர் பர்மா காலனி, மலைக்கோவில், ஆலத்தூர், கீழக்கல்கண்டார் கோட்டை, முடுக்குப்பட்டி,
நத்தமாடிப்பட்டி, திருநகர், பேன்சி நகர், அடைக் கல அன்னை நகர், தெற்கு காட்டூர், வடக்கு காட்டூர், வீதிவடங்கம், எல்லைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் அன்பழகன் தீவிர
பிரசாரம் செய்தார்.
முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், தேர்தல் பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி, மயில் பெரியசாமி, தொ.மு.ச. பேரவை செயலாளர் மாயழகு,
மாவட்டப் பிரதிநிதி நவல்பட்டு சித்திரவேல்
மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...