சுப்ரீம் கோர்ட்டின், புதியதலைமை நீதிபதியாக,ஆர்.எம்.லோதா நியமிக்க பட்டுள்ளார்.இம்மாதம் 27ல், அவர் பதவி ஏற்கிறார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக,தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் உள்ளார்.
இவர் பதவியில் இருந்து, விரைவில் ஓய்வுபெற உள்ளார்.சதாசிவத்தை தொடர்ந்து,
சுப்ரீம் கோர்ட்டில், மூத்த நீதிபதியாக உள்ளவர் லோதா, 64.புதியதலைமை
நீதிபதி பதவிக்கு இவர் பெயரை, தலைமை நீதிபதி சதாசிவம் பரிந்துரை
செய்துள்ளார்.இதைத் தொடர்ந்து, லோதாவை, புதிய தலைமை நீதிபதியாக, ஜனாதிபதி
பிரணாப்முகர்ஜி நேற்று நியமித்துள்ளார்; இதற்கான அறிவிப்பை,சட்ட அமைச்சகம்
நேற்று வெளியிட்டது. இம்மாதம் 27ல்,புதிய தலைமை நீதிபதியாக, லோதா பதவியேற்க
உள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் 27ல், இவர் ஓய்வு பெறஉள்ளதால், ஐந்து
மாதங்கள் மட்டுமே பதவி வகிப்பார். இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.
இவர் தந்தை,ராஜஸ்தான்உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். 2008 முதல்,
சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...