குரூப் "சி' மற்றும் "டி' நிலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது
மத்திய பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி
மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் குரூப் "சி' மற்றும் "டி' நிலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி
வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்
வரும் மருத்துவமனைகளில் பணிபுரியும் குரூப் "சி' மற்றும் "டி' நிலை ஊழியர்களுக்கு மத்திய சுகாதாரம்
மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊதிய உயர்வு அளித்திருந்தது.
இதில் நோயாளிகள் பராமரிப்புப் படி இரண்டு மடங்காக உயர்த்தி ஊழியர்களுக்கு
வழங்கப்பட்டது.
இதுபோல் மத்திய உயர் கல்வித் துறையின்
கீழ் வரும் மத்திய மருத்துவப் பல்கலைக்கழக குரூப் "சி' மற்றும் "டி' ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு
அளிக்கப்பட வேண்டும் எனபல்கலைக்கழக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இத் தகவல் யுஜிசி சார்பில் மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த அமைச்சகம்,
இந்த ஊழியர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும்
அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்திக் கொள்ளவும்,
நோயாளிகள் பராமரிப்புப் படியில் 25 சதவீத உயர்வு அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய பல்கலைக்கழகங்களை யுஜிசி
அறிவிறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...