வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று 2 ஆம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டிருந்தனர். இவர்கள் வேலூர் மாவட்டத்தின் மற்றொரு முனையில் உள்ள திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளியில் இருந்து பயிற்சி வகுப்புக்காக வந்திருந்தனர். ஏறத்தாழ 5 மணி நேர பயணம் செய்து சோர்வுடன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்களை மதிய உணவு நேரத்தில் அங்குள்ள தேனீக்களின் கூண்டு கலைக்கப்பட்டதால், தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டத் துவங்க ஆசிரியர்கள் பதறியடித்து ஓடத்துவங்கினர். ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேனீக்கள் கொட்டியதால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தேர்தல் பணியுடன் தேனீக்களினால் ஏற்பட்ட பிணியும் ஆசிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படி எல்லோருமே எங்களை கொட்டிட்டே இருந்தா எப்படி???...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்லா கொட்டுகலையும் வாங்கி வாங்கி சுய மரியாதையினை தொலைத்து விட்ட இனம்.
ReplyDelete