மூலனூரை அடுத்த சின்னக்காம்பட்டி அரசு பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் கைது செய்தனர்.
குடிநீர் தொட்டியில் விஷம்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி சின்னக்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி யாரோ விஷம் கலந்து விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரனை நடத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. மேலும் பள்ளிக்கூட குடி நீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் அறிவித்தனர். எனவே பள்ளிக்கூடம் திறந்த போதும் மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்துக்கு வர வில்லை.
இதையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் யதுநாதன், தாராபுரம் போலீஸ் துணை சூப்பி ரண்டு இளங்கோவன், தாசில்தார் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் கள். அப்போது பொதுமக்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவ தாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
கைது
அதை ஏற்று பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பள்ளிக்கூடம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவர்தனாம்பிகை, தண்டாயுதபாணி ஆகியோர் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சின்னக்காம் பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் குப்புச் சாமியை (வயது 55) கைது செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...