அரசின் கல்வி கட்டண விவரபட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில், பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின்
கல்வி கட்டண விபர பட்டியல் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு, 25 சதவீத
இடஒதுக்கீடு அரசாணையை, பள்ளி நிர்வாகங்கள், பொதுமக்கள் பார்வையில் படுமாறு,
நோட்டீஸ் போர்டில் வைக்க வேண்டும். ப்ளஸ் 2 ரிஸல்ட்டை மாணவ, மாணவியர்
எளிதில் அறியும் வகையில், அந்தந்த பள்ளிகளிலேயே, தேவையான வசதியை ஏற்படுத்த
வேண்டும். மார்க் ஷீட், வேலைவாய்ப்பு பதிவு குறித்து, அரசிடம் இருந்து
தகவல் ஏதும் வரவில்லை. ப்ளஸ் 1 ரிஸல்ட், மே, ஐந்தாம் தேதிக்குள் வெளியிட
வேண்டும். கல்வியில் மிக, மிக மோசமாக, பள்ளிக்கு சரிவர வராத மாணவ,
மாணவியருக்கு மட்டுமே, தோல்வி சான்று அளிக்க வேண்டும். ஆறு, ஏழு, எட்டு,
ஒன்பது வகுப்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும், தேர்ச்சி வழங்க வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு என,
வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்
மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள, கல்வியாளர்களை கொண்டு நடத்த வேண்டும்.
கல்வி
மாவட்ட அளவிலும், கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த
வேண்டும், என்று அவர் பேசினார். கடந்த, 2013-14ம் கல்வி ஆண்டு முடிந்து,
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆறு முதல், எஸ்.எஸ்.எல்.ஸி.,
வகுப்பு, ப்ளஸ் 2 பாட பிரிவுகளுக்கு, ஜூன் இரண்டாம் தேதி பள்ளி
திறக்கப்படுகிறது. ப்ளஸ் 1 பாட பிரிவுக்கு ஜூன், 16ம் தேதி பள்ளி
திறக்கிறது. கடந்தாண்டுகளை விட, இந்தாண்டு, அரசு பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை விகிதத்தை, அதிகரிக்க வேண்டும். 30 மாணவர்களுக்கு, ஒரு வகுப்பு
என்ற நிலையை மாற்றி, 23 பேர் இருந்தாலே, புதிய வகுப்பை துவக்கலாம், என,
இந்தாண்டு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அரசு
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு குறித்த, தலைமை
ஆசிரியர்களுக்கான கூட்டம், நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும்
தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழ்
மட்டுமின்றி, ஆங்கில வழி வகுப்புகளிலும், மாணவர்களை சேர்க்க வேண்டும். இடை
நிற்றலை தடுக்க, பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து, பள்ளி தலைமை
ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். தேவை ஏற்பட்டால், பள்ளியில், ஆங்கில வழி
கல்வியை துவக்கலாம். பஸ் பாஸ் வழங்குவது, என்.எஸ்.எஸ்., வகுப்புகளை துவக்கி
நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில்,
உதவியாளர்களுக்கான சம்பள விபர பட்டியலை, உடனுக்குடன் அனுப்ப வேண்டும்.
தணிக்கை உள்ளிட்ட அனைத்து புகார் புத்தகங்கள், ஆவணங்களை சரிவர வைத்து
இருக்க வேண்டும், என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...