பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பட்டியலில், மீண்டும் இடம்பெறும் சிறார்களை,
பெற்றோர்களின் அனுமதியோடு காப்பகத்தில் தங்கிஅடிப்படை கல்வி பெற ஏற்பாடு
செய்யப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநிலம் முழுவதும் பள்ளி செல்லா
குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கோவையில், பள்ளி செல்லா
குழந்தைகள் கணக்கெடுப்பில், இதுவரை 150க்கும் மேற்பட்ட குழந்தைகள்
கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், கடந்தாண்டு பள்ளி செல்லா
குழந்தைகளுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது.இதை
கட்டுப்படுத்த, கணக்கெடுப்பு பணி முடிந்ததும், பழைய பட்டியல்களில்
இடம்பெற்றுள்ள சிறார்களின் விபரங்களை தனிப்பட்டியலாக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவர்களின் பொருளாதார சூழல், குடும்ப பின்னணியை
அறிந்து, பெற்றோர் ஒத்துழைக்கும் பட்சத்தில், காப்பகங்களில் தங்கி படிக்க
வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த,
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு மையம் முனைப்பு காட்டியுள்ளது. இதன்
முதற்கட்டமாக, கவுண்டம்பாளையத்தில், நான்கு சிறுவர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். குடும்ப சூழ்நிலையால், வீட்டில் தங்கி படிக்க
வசதியில்லா சிறுவர்கள், காப்பகத்தில் படிக்கும்போது, அடிப்படை கல்வி பெற
முடியும் என்ற நோக்கில், இந்த பணிகள் நடக்கின்றன.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி விஜயா கூறுகையில்,&'&'பள்ளி செல்லா சிறுவர்களுக்கான கணக்கெடுப்பு பணி முடிந்ததும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒத்துழைப்பில், கடந்தாண்டுகளில் இடம்பெற்றுள்ள சிறார்களின் பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவர்கள், அவர்களின் பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை வழங்கி, உதவி தொகையுடன் மீண்டும் பள்ளிக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்.இது முடியாத பட்சத்தில், பெற்றோர்களின் அனுமதியோடு குழந்தைகள் நல மையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், காப்பகத்தில் தங்க வைத்து படிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்" என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...