தமிழ் இலக்கியங்களில் ஒன்றான, குறுந்தொகையை, பிஜோய் சங்கர் பர்மன் என்ற
கவிஞர், அசாம் மொழியில், மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். அசாமை சேர்ந்த பிரபல
கவிஞர், பிஜோய் சங்கர் பர்மன். இவர், "சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார்' விருது பெற்றவர்.
தமிழ்சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகை பாடல்களை, அசாம் மொழியில், மொழி பெயர்த்துள்ளார். புறநானூறு, அகநானூறு, கலித் தொகை உள்ளிட்ட எட்டுத் தொகைகளில், குறுந்தொகையும் ஒன்று. மிக குறைவான அடிகளை உடைய பாடல் கள் என்பதால், இதற்கு குறுந்தொகை என, பெயர் வந்தது. இவற்றில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும்,நான்கு முதல் எட்டு அடி கொண்டவை. இந்த பாடல்களை, அசாமி மொழியில், மொழிபெயர்த்தது பெரும்சவாலான காரியமாக இருந்தாக, பர்மன் கூறியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: அசாம் - தமிழ் ஆகிய இரு கலாசாரங்களுக்கு பாலம் அமைக்கும் விதமாக, குறுந்தொகையை, மொழி பெயர்த்துள்ளேன். இது, சாதாரண விஷயமாக இருக்கவில்லை. 10 ஆண்டுகள்இதற்காக சிரமப்பட்டேன்.
காதல், பிரிவு, உணர்வு ஆகிய விஷயங்களை, அர்த்தத்துடன் கற்பிக்கும் மிகச் சிறந்த
நூல், குறுந்தொகை. இதை, அசாமி மொழியில் மொழி பெயர்த்ததை எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். பர்மன் வெளியிட் டுள்ள, இந்த மொழிபெயர்ப்பு புத்தகத்தில், தமிழ்அறிஞர்கள் எம்.எல்.தங்கப்பா, நிர்மல் செல்வமணி ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...