நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில்,
அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் இடது
சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசுஊழியர் சங்கத்தின் முன்னாள்
மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு
கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து தனியாக தமிழ்நாட்டில் தேர்தலை
சந்தித்திருப்பது இது முதல் முறையாகும் அரசுஊழியர் ஆசிரியர்களின்
முதன்மையான கோரிக்கை புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து , ஏற்கெனவே
அமலில் உள்ள வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும்
என்பதே ஆகும். பாரதிய ஜனதா தலைமையில் இருந்த மத்திய அரசு இந்ததிட்டத்தை,
2001-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தியபோதே, தாய் எட்டடி
பாய்ந்தால் குட்டி பத்தடி பாயும் என்பதற்கிணங்க அன்றுதமிழ்நாட்டில்
ஆட்சியில் இருந்த அண்ணா திமுக அரசு, 01-04-2003 முதல் அமல்படுத்தியது. அது
மட்டு மல்லாமல் அரசுஊழியர்களின் ஓய்வூதிய கால உரிமைகள் மீது கையை வைத்தது.
இதற்கெதிராக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கிளர்ந் தெழுந்து போராடியது
வரலாற்று நிகழ்வாகும். அந்த நேரத்தில் 1,70,000 அரசுஊழியர்களை அண்ணா திமுக
அரசு டிஸ்மிஸ் செய்தது. பணியில் சேர்க்க மறுத்தது.
அரசுஊழியர்கள் தத்தளித்துக்கொண்டிருந்த
நேரத்தில், சிஐடியு சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், தமிழ்நாடு அரசு
போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் டி.கே.
ரங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக, தமிழ்நாடு அரசு,
டிஸ்மிஸ் செய்த அரசுஊழியர்களை, ஆசிரியர்களை பணியில் சேர்க்க
வேண்டியதாயிற்று. அதை தொடர்ந்து நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வெற்றி
பெற்று வந்ததிமுக அண்ணா திமுக அரசு அமல்படுத் திய புதிய பென்சன் திட்டத்தை
தொடர்ந்து அமல்படுத்தியது. அது மட்டுமல்லாமல் மன்மோகன் சிங் அரசில் அங்கம்
வகித்த திமுக புதிய பென்சன் திட் டத்தை அமல்படுத்திய போது வேடிக்கை
பார்த்தது.புதிய பென்சன் திட்டத்தை அமல் படுத்த, பாரதிய ஜனதா தலைமையிலான
மத்திய அரசும், காங்கிரஸ் தலைமை யிலான அரசும் முனைந்து செயல்பட்டுக்
கொண்டிருந்த வேலையில், இதற்கெதிராக இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில்.
தொடர்ந்து எதிர்த்து குரல் எழுப்பி வந்தனர். இதன் காரணமாக 10 ஆண்டு காலமாக
புதிய பென்சன் திட்டம் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. இறுதியாக சென்ற ஆண்டு
பாரதிய ஜனதாவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்றிய
அவலம் நடந்தேறியது.
அண்ணா திமுக கடந்த சட்டமன்றத் தேர்தல்
நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் வெற்றி பெற்று வந்தால்,
தமிழ் நாட்டில் புதிய பென்சன் திட்டத்தை மறு பறுசீலனை செய்வேன் என்று
கொடுத்த வாக்குறுதி மூன்று ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் காற்றில்
பறக்க விடப்பட்டுள்ளது.காங்கிரஸ், பாரதிய ஜனதா, திமுக,அண்ணாதிமுக இந்த
நான்கு கட்சிகளும் அரசுஊழியர் ஆசிரியர்களின் பென் சனுக்கு வேட்டு வைத்த
கட்சிகள். இன்றை தேர்தல் களத்தில், இந்த நான்கு கட்சிகள் தனித் தனியாகவும்,
அவைகளை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிட முடிவு
செய்துள்ளன.
அரசு ஊழியர்களின் பென்சனை கடைசிவரை பாதுகாக்க
போராடிய, குரல் கொடுத்த இடது சாரிகளுக்கு வாக்களிக்க இன்று வாய்ப்பு
கிடைத்துள்ளது. இதை பயன் படுத்திக்கொண்டு இடதுசாரிகள் நிற்கும் 18
தொகுதிகளிலும் இலட்ச கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர் தம்
குடும்பத்தினர் என தமிழகத்தில் இடது சாரிகளுக்கு வாக்களித்து அவர்களை
வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Amma irandu communistukalukum alukku 2 MP seat koduthu irundal ippadi ellam pesa mudiuma. 2003 ippathan ninaivu vandada.
ReplyDeleteELLARUM THIRUDARKAL THAN. IDHIL PERIYA THIRUDAN YARU CHINNA THIRUDAN YARU ENDRU PARUNGAL. ADHU MATTUMILLA NOTA VOTE ADHIGAMA IRUNDHALUM VETPALARGALIL YARU ADHIGAMA VOTE PERUGINDRARKALO ANDHA PUDUNGITHAN JAICHARNU ELLECTION COMMISSION ARIVIKUMAM APPARAM EDHUKKU INDHA VENDADHA VELA. VANGARA SAMBALAM PODHADHA
ReplyDelete