நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சியின் வேட்பாளரை விட, நோட்டாவுக்கு
அதிக வாக்குகள் கிடைத்தால் என்னவாகும். அந்த தொகுதியில் மறுதேர்தல்
நடக்குமா அல்லது தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று பாமர மக்களிடையே
எழுந்துள்ள கேள்வி. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு
டெபாசிட் கிடைத்ததா, இல்லையா? என்பதை எப்படி உறுதிபடுத்துவது என்பது
குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் கூறியதாவது:
ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க
வாக்குகளில் 6ல் ஒரு பங்குக்கும் கூடுதலான வாக்குகளை பெற்றால் அந்த
வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்கும். இந்த மொத்த வாக்கில் நேட்டோ
சின்னத்தில் பதிவான வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
அதேபோன்று, ஒரு தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுமே பதிவான
மொத்த வாக்கில் 6ல் ஒரு பங்கு வாக்கு பெறவில்லை என்றால் அதிக வாக்கு பெற்ற
வேட்பாளருக்கு டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படுவதுடன், அவரே வெற்றி
பெற்றவராகவும் அறிவிக்கப்படுவார். அதேபோன்று, போட்டியிட்ட அனைத்து
வேட்பாளர்களைவிட நோட்டோ சின்னத்தில் அதிக வாக்குகள் பதிவானால், எந்த
வேட்பாளர் நோட்டாவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் வாங்கினாரோ அவர்
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்று பிரவீன்குமார் கூறினார்.
What is the meaning of giving NOTA option, if you don't consider the number of votes cast to NOTA? If NOTA has got maximum number of votes, that election should be canceled. It means majority do not want these candidates. Then only the political parties will send correct candidates....please think of this
ReplyDeleteETHUKKU NOTA KAKKAL MADAYARKAL NEENKAL MATTUM ARIVAALIYA
ReplyDelete