எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ள
நிலையில் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவை
மேற்கொள்ள, விபரங்களை சேகரிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்
சான்று வழங்கும் பொழுது ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே 10ம் வகுப்பு முடித்து மதிப்பெண் சான்றுகளை வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்த 12ம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் பெயர்,
பள்ளியின் பெயர், பதிவெண், முகவரி, ஏற்கனவே பதிந்த வேலை வாய்ப்பகத்தின்
பதிவெண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
முதல் முறையாக பதிவு செய்யும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்கள்
அவர்களின் பெயர், பள்ளியின் பெயர், பதிவெண், பிறந்த தேதி, பாலினம், அப்பா,
அம்மா பெயர், முகவரி, மாவட்டம், ரேஷன் கார்டு எண், சாதி சான்றிதழ் எண்,
மதம், உயர்கல்வி படிக்க விரும்புகிறீர்கள், எனில், எந்த வகையான படிப்பு,
அதை விடுத்து தொழில் செய்ய விரும்பினால், சொந்த தொழிலா, பிறரிடம் வேலைக்கு
செல்கிறீர்களா? ஆகிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விபரங்களை தலைமை ஆசிரியர்கள் வருகிற மே 2-ம்தேதிக்குள் சேகரித்து
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கணினி ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு
அதிகாரிகளுடன் ஆலோசித்து, பதிவை ஆன்லைனில் செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன்
கூட்டியே மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...