ஓட்டுச்சாவடிகளில் இரண்டு
நாட்களுக்கு மட்டும் தேவைப்படும் மின்விளக்குகள், மின்விசிறிகளை வாடகைக்கு
எடுத்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை,
மத்தியசென்னை, தென்சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில், 3,254 ஓட்டுச்சாவடிகள்
உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளி கட்டடங்கள். அங்கு ஏற்கனவே
மின்விளக்குகள், மின்விசிறி வசதிகள் உள்ளன. இருப்பினும், ஓட்டுச்சாவடி
நிலைய அலுவலர்கள், அரசியல் கட்சி ஏஜன்டுகள் அமரும் இடங்கள், ஓட்டுப்பதிவு
இயந்திரம் வைக்கப்பட உள்ள இடங்களில் போதிய வெளிச்சம் உள்ளதா என, மாநகராட்சி
மின்துறை ஆய்வு மேற்கொண்டது. அதில், பெரும்பாலும் ஒரு ஓட்டுச்சாவடிக்கு
குறைந்தது ஒன்று முதல் இரண்டு மின்விளக்குகள் கூடுதலாக அமைக்க முடிவு
செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் மின்விசிறி
வசதிகளும் சரியாக இல்லை.அதனால் ஓட்டுச்சாவடிகளுக்கு தேவைப்படும்
மின்விளக்குகள், மின்விசிறிகள், 'பிளக் பாயின்ட்' ஆகியவை
கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜெனரேட்டர்:
அவற்றின் பயன்பாடு இரண்டு நாட்களுக்கு
மட்டுமே என்பதால், அருகில் உள்ள ஒலி பெருக்கி கடைகளில் இருந்து வாடகைக்கு
பெற்று பயன்படுத்த தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல்,
மின்தடை பிரச்னையை சமாளிக்க, ஒரு தொகுதிக்கு, ஒரு 10 கேவிஏ., திறன் கொண்ட
ஜெனரேட்டரை தயாராக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...