தொடக்கக் கல்வித்துறை, தேர்வுக்கான கால அட்டவனையை கடந்த சில மாதங்களுக்கு முன்வெளியிட்டது.
அதில், நாடாளுமன்ற தேர்தல் நாளான ஏப்ரல் 24ம்
தேதியும் தேர்வு நாளாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், சில
தினங்களுக்கு முன் ஆண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 21ம் தேதி தமிழ், 22ம் தேதி ஆங்கிலம், 26ம் தேதி கணிதம், 28ம் தேதி அறிவியல், 29ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.கல்வி அதிகாரி
ஒருவர் கூறுகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், துவக்கப்பள்ளிக்கு
தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. தற்போது, தேர்தல்
தேதி, அட்டவணை நாளுக்குள் வருவதால் அதில் மாற்றம் செய்யப்பட்டு புதிய
அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல், 21 முதல், 29ம்
தேதியுடன் தேர்வு முடிந்து, 30ம் தேதி பள்ளி வழக்கம்போல் செயல் பட்டு, மே 1ம் தேதி
முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றார்.
thanks
ReplyDelete