தேர்தல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட நாட்களை
ஈடு செய்ய, பெரும்பாலான அரசு பள்ளிகளை, மே முதல் வாரத்தில் திறந்து வைக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, ஊராட்சி மற்றும் உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கடந்த 2013--14ம் ஆண்டு, 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்தாண்டு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டன. லோக்சபா தேர்தல் பயிற்சிக்கு 3 நாட்கள், தேர்தல் பணிக்கு 3 நாட்கள் என, ஆசிரியர்களின் பணி நாட்கள் செலவானது.ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளில், பள்ளிகளை மூடிவிட்டு தேர்தல் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏப்., 30ம் தேதியுடன் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் முடிய உள்ளது. எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, தேர்தல் பணி பயிற்சி மற்றும் தேர்தல் பணி நாட்களில் விடுமுறை விடப்பட்டதால், வேலை நாட்களை ஈடு செய்ய, தேர்வுகள் முடிந்தும் மே முதல் வாரம் பள்ளிகளை திறக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றப் பேரவையின் மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:கடந்த காலங்களில், எஸ்.எஸ்.ஏ., பயிற்சி நாட்கள், தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் நாட்கள், பள்ளி வேலை நாட்களாக கருதப்பட்டன. ஏப்ரல் 30ம் தேதியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த தடவை, பயிற்சி நாட்கள், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படவில்லை.மே முதல் வாரத்திலும் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டியுள்ளது. ஆகவே, எஸ்.எஸ்.ஏ., பயிற்சி நாட்கள், தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் பணி நாட்களை, பள்ளி வேலை நாட்களாக உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ஆரோக்கியதாஸ் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...