சோலார் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும்போது அதிலிருந்து மின்சாரம்
தயாரிக்கலாம் என மதுரை கே.எல்.என். தகவல்தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள்
நிரூபித்துள்ளனர்.
சோலார் ரோடுகள் குறித்து, கல்லுாரியில் நான்காம் ஆண்டு சிவில் மாணவர்கள்
சிவசங்கர், ஸ்ரீராம், அஜய்குமார், கார்த்திக் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:
அமெரிக்காவில் சோலார் நெடுஞ்சாலையில் இருந்து மின்சாரம்
தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை இல்லை. நெடுஞ்சாலைகளில் தரமான தார்
ரோடு அமைத்தாலும், இரண்டாண்டுகள் கழித்து, பராமரிப்புப் பணிகளை தொடர்ந்து
செய்ய வேண்டும்.இதற்கு நிதி அதிகம் செலவாகும். சோலார் கண்ணாடியால் ஆன
ரோடுகளை அமைத்தால், ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது டயருக்கும்,
ரோடுக்கும் இடையே ஏற்படும் உராய்வில் வெப்பம் உற்பத்தியாகும். அதிலிருந்து
மின்சாரம் தயாரிக்கலாம்.
சூரியஒளி ஒன்றுதான், தீர்ந்து போகாமல் தொடர்ந்து கிடைக்கும் ஒரே ஆதாரம்.ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது, வழுக்காமல் இருப்பதற்கேற்ப, உராய்வு விசையை அடிப்படையாக கொண்டு, கண்ணாடி பேனல்கள் தயாரிக்கலாம். மழைக் காலத்திலும் வழுக்காமல் செல்லும். சூரிய ஒளியில் மட்டுமின்றி, பனியிலும் மின்சாரம் தயாரிக்கலாம். உறைபனிக் கட்டியிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை கொண்டு, மின்சாரம் தயாரிக்கலாம். அதேநேரத்தில், பனியையும் உருகவைக்க முடியும். ஜம்மு, காஷ்மீரில் அதிக பனியால் ரோடுகள் பாதிக்கப்படும்போது, சோலார் ரோடுகள் கைகொடுக்கும்.எங்கள் கல்லுாரியில் ஒரு லட்ச ரூபாயில், 12 மி.மீ., கனமுள்ள சோலார் பேனல்களை அமைத்துள்ளோம். இதில் டூவீலர், கார்கள் ஏறிச் சென்றாலும் உடையாது. டயர் உரசும்போது, கிடைக்கும் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்த மின்சாரத்தைக் கொண்டு, இரவில் நான்கு டியூப்லைட்கள் எரிகின்றன என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...