Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோடை விடுமுறையிலும் தொடர் வகுப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கை


         தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்களிலும் தொடர் வகுப்பு நடத்தப்படுகிறது.
 
                     இதனால் மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.பள்ளி தேர்வு முடிந்து ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படும். இதில் மாணவர்கள் தங்களது உறவினர் வீடுகள், சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது வழக்கம். ஆனால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கோடைகால சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் பள்ளி கதியென கிடக்கின்றனர். சில தனியார் மற்றும் மெட் ரிக் பள்ளிகள் கோடை விடுமுறையிலும் மாணவர்களை பள்ளிக்கு சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் வரவழைத்து கட்டாய கல்வி போதிக்கின்றனர்.பழநி பகுதியில் சில தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பிளஸ் 1 ல் பிளஸ் 2 பாடங்களும் நடத்த துவங்கிவிட்டன. விடுமுறை நேரத்திலும் பாட சுமைகளை திணித்து வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் பள்ளி நடத்தக்கூடாது என அரசின் விதிமுறை இருந்தும் அது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கோடை விடுமுறையை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் விடுமுறை அளிப்பது கிடையாது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது வெறுப்பை காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறை காலங்களில் வகுப்பு எடுக்கும் பள்ளிகள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்களை திணிக்கும் வேலை தான் நடக்கிறது. புரிந்து கற்பிக்கும் நிலை இல்லை.

மாணவர்களுக்கு ஓய்வே இல்லாமல் தொடர்ந்து பாடங்களை படிக்குமாறு நெருக்கடி கொடுப்பதால் மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பது வழங்கப்படவே இல்லை.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தேர்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு வரச்சொல்லி விடுகின்றனர். இம்மாதம் முதல் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களையும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிகளுக்கு வரச்சொல்லி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




1 Comments:

  1. sir,
    this is only one time in student's life.
    but still the teachers sacrificed themself for student's welfare,every year.
    congrats to the teachers.
    thanks

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive