'தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது புகார் வந்தால், அவர்கள்
கண்காணிக்கப்படுவர்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார்
தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 'தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள்,
பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்
நடத்தும் அலுவலர்கள் மீது புகார் வந்தால், அவர்கள் கண்காணிக்கப்படுவர்;
புகார் விசாரிக்கப்படும். உண்மையாக இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும். சில அதிகாரிகள் மீது வந்த புகார்கள் பொய்யானவை என தெரிய
வந்தது. நடுநிலையாக செயல்படும் அதிகாரிகள் மீதும், சிலர் வேண்டுமென்றே
புகார் கூறுகின்றனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக, பொதுவாக புகார்
கூறுகின்றனர். ஆதாரத்துடன் எந்தப் புகாரும் வரவில்லை. சென்னை
ராயப்பேட்டையில், மேயர் தலைமையில் நடந்த பிறந்த நாள் விழாவில்,
அ.தி.மு.க.,வினர் பணம் வினியோகித்ததாக புகார் வந்தது. பறக்கும் படையினர்
அங்கு சென்றபோது, அங்கு மேயர் இல்லை. அங்கு புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி
பெற்று, பிறந்த நாள் விழா என்ற பெயரில், கட்சியினரை அழைத்துள்ளனர். எனவே,
அனுமதி பெறாமல் விழா நடத்திய ராமன் என்பவர் மீது, வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தி.மு.க., சார்பில், புகார் மனு
அளித்துள்ளனர். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...