நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களில்
கர்ப்பிணிகள், கை குழந்தை வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க
வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரயர் கூட்டணியினர்
கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் நியமித்து
அதற்கான ஆணையை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.இதில் 150 கிலோ மீட்டர்
தூரத்துக்கு மேல் சென்று பணி புரிய உள்ளதாலும், ஒருநாளைக்கு முன்பே செல்ல
வேண்டியுள்ளது. இதனால் கர்ப்பிணி ஆசிரியர்கள், கை குழந்தை வைத்திருக்கும்
ஆசிரியர்கள் ஆகியோர் கடும் மன உளைச்சலுக்கும், சிரமத்துக்கும்
ஆளாகியுள்ளனர்.குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கும் இதில் விலக்கு
அளிக்கவில்லை. எனவே தேர்தல்ஆணையத்தினர் உரிய பரிசீலனை செய்து இவர்களுக்கு
விலக்கு அளிக்க வேண்டும். அல்லதுகுடியிருப்பு பகுதிகளுக்கு அருகில்
பணியிடங்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவசியம் விலக்கு அளிக்கப்படவேண்டும்
ReplyDelete