குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கான புதிய ப்ரீபெய்டு திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தில் 20
உள்ளூர் மற்றும் தேசிய குறுஞ்செய்திகளை(எஸ்.எம்.எஸ்) இலவசமாக
பெறலாம்.மேலும் 45 நிமிஷம் பி.எஸ்.என்.எல். நிறுவன மொபைல் எண்கள் அல்லது
இதரமொபைல் போன் எண்களுடனும் இலவசமாக பேசலாம்.நிர்ணயிக்கப்பட்ட அளவைத்
தாண்டி அனுப்பும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கு 5 பைசாவும், 10 கேபி
டேட்டாவுக்கு 2 பைசா எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது
தொலைத் தொடர்பு சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது.இதைக் கருத்தில் கொண்டு
மாணவர்களைக் கவரும் நோக்கில் இப் புதிய சிறப்புத் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய திட்டம் குறித்து முழு விவரங்களை
சென்னை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல்.
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
only for students thana engalugala ilaya.
ReplyDelete