இந்தியப் பெருங்கடலில் துடிப்பு சிக்னல் கிடைத்துள்ளதாக மாயமான விமானத்தை
தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன ரோந்து கப்பல் கண்டுபிடித்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேடும் பணியில் சீனாவின் ரோந்து கப்பலான ஹாய்சுன்-01 ஈடுபட்டிருந்தது. அப்போது, கடலுக்கடியிலிருந்து துடிப்பு சமிக்ஞை (பல்ஸ் சிக்னல்) கிடைத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட இந்த ரோந்து கப்பலுக்கு, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் கடலுக்கடியில் இருந்து வினாடிக்கு 37.5 கிலோ ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட துடிப்பு சிக்னல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த சிக்னல், தென் அட்ச ரேகையிலிருந்து 25 டிகிரியிலும், கிழக்கு அட்ச ரேகையிலிருந்து 101 டிகிரியிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து இந்த அளவுக்கு சிக்னல் வெளிப்படும். எனவே, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிக்னல், காணாமல் போன எம்.எச்.370 விமானத்தில் இருந்து வந்ததா? என ஆராயப்பட உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...