வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தவேண்டும்,” என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்., 24 ல் ஓட்டுப்பதிவு நடக்க
உள்ளது. ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, மாதிரி
ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். மாதிரி ஓட்டுப்பதிவு குறித்து முன்கூட்டியே
ஏஜன்ட்களுக்கு தெரிவித்து விட வேண்டும். வேட்பாளர்களின் ஏஜன்ட்கள்
முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள 'நோட்டா' உட்பட
அனைத்து பட்டன்களையும் அழுத்தி காட்ட வேண்டும். அதன்பின், 'கன்ட்ரோல்'
யூனிட்டில் ஓட்டுகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக மாற்றியபின்,
இயந்திரத்திற்கு 'சீல்' வைக்கவேண்டும். இந்த ஓட்டுப்பதிவை 'வெப் கேமரா'
அல்லது 'வீடியோ' மூலம் பதிவுசெய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...