UPSC நடத்தும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த
மருத்துவ சேவைகள் தேர்வு(CMS) முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு வரும் ஜுன் மாதம் 22ம் தேதி
நடைபெறவுள்ளது. சோதனை தேர்வுகளை, UPSC இணையதளத்தில் விரைவில் எழுதலாம்.
பல்வேறான அரசு ஏஜென்சிகளில், மருத்துவ அதிகாரிகளை நியமிக்கும் பொருட்டு
இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
என்று 2 பிரிவுகளாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற
ஒருவர், கீழ்கண்ட துறைகளில் மருத்துவ அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவார்.
அவை,
Railways
Indian Ordnance Factories Health Service
Central Health Services
East/North/South Delhi Municipal Corporation
New Delhi Municipal Council
UPSC இணையதளம் சென்று, இத்தேர்வை எழுத
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தலா 250 மதிப்பெண்களைக் கொண்ட 2 தாள்கள்
இத்தேர்வில் உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஏப்ரல் 21.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...