உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வெறும் 3
சதவீதத்தை மட்டுமே கல்விக்காக இந்தியா தற்போது செலவழிக்கிறது. தொடக்கக்
கல்வியில் 100 சதவீத மாணவர்கள் சேர்ந்தாலும், அதை முடிக்கும் முன்பே 40
சதவீத மாணவர்கள் நின்று விடுகின்றனர். எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறும்
வகையில் கல்வி முறை தரமாக இல்லை.
காங்கிரஸ் மேல்நிலைக் கல்வியில் அதிகமானோர் சேர
வழி செய்யப்படும். மாணவர்கள் இடையில் நிற்பது தடுக்கப்படும். கல்லூரிகள்,
பல்கலைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனி திட்டம் கொண்டு வரப்படும்.
உயர்கல்வியில் முதலீடுகள் அதிகரிக்கப்படும். கல்லூரிகளில் கல்வியின் தரத்தை
கண்காணிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
பா.ஜ., "அனைவருக்கும் கல்வி' திட்டம் சிறப்பாக
செயல்பட, தணிக்கை செய்யப்படும். காலத்திற்கேற்ற மாறங்ஙகள் செய்யப்பட்டு,
இத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனித்
திட்டங்கள் செயல்படுத்தப்படும். கிராமம், பழங்குடியினர் பகுதிகளும்
பயன்பெறும் வகையில் உலகத்தரத்திற்கு பள்ளிக் கல்வியின் தரம்
உயர்த்தப்படும். யு.ஜி.சி., மேம்படுத்தப்பட்டு, உயர்கல்வி கமிஷனாக
மாற்றப்படும்.
மார்க்சிஸ்ட் உள்நாட்டு உற்பத்தியில் 6
சதவீதம், கல்விக்கு ஒதுக்கப்படும். கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, தரம்
உயர்த்தப்பட்டு, பள்ளி இடைநிற்றல் குறைக்கப்படும். கல்வித் துறையில்
வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்படாது. வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் உள்ளே
நுழைய வழி தரப்பட மாட்டாது.
மற்றவை: தி.மு.க., உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 7 சதவீதம் ஒதுக்கப்படும்.
ஆம்ஆத்மி டில்லி பல்கலையின் 4 ஆண்டு படிப்பு நிறுத்தப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...