Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆங்கிலம் முதல் தாள்; அவுட் ஆப் போர்ஷன்' கேள்விகள் எதுவும் வரவில்லை

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்கியது; நேற்று, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது.தேர்வெழுதிய பின், மாணவ, மாணவியர் கூறியதாவது:எல்லா கேள்விகளும் "ஈஸி'யாக இருந்தன. அதிக முறை படித்த கேள்விகளே வந்திருந்தன. ஆசிரியர்கள் முக்கிய வினாக்கள்என கூறியிருந்த கேள்விகளே அதிகளவில் கேட்கப்பட்டிருந்தன. 
 
             ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள், பாராகிராப் என எந்த பகுதியும் சிரமமாக இல்லை. எல்லா கேள்விகளுக்கும், தயக்கமும், பயமும் இல்லாமல், பதில் எழுதினோம். 90 முதல் 95 மதிப்பெண் வரை நிச்சயம் கிடைக்கும். பாடப்பகுதிகளில் இருந்தே நிறைய கேள்விகள் வந்திருந்தன. "அவுட் ஆப் போர்ஷன்' கேள்விகள் எதுவும் வரவில்லை. ரொம்ப ரொம்ப "ஈஸி'யாக இருந்தது, என்றனர். திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி ஆங்கில ஆசிரியர் மேரி பெனிதா சர்மிளா கூறுகையில், ""பொருள் கூறு, எதிர்சொல் பகுதி, ஐந்து மதிப்பெண், பாராகிராப் என அனைத்து பகுதியும் எளிமையானதாக இருந்தது. பலமுறை படித்த கேள்விகளே இருந்ததால், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கூட எளிதில் தேர்ச்சி பெற்றுவிடுவர். புத்தகத்தில் இருந்தே ஒரு மதிப்பெண் கேள்விகள் வந்திருந்தன. நல்ல முறையில் படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவது உறுதி,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive