தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், நடு இரவு,
இரண்டு மணிக்கு விடுவிக்கப்பட்டதால், பெண் ஊழியர்கள் விடிய, விடிய, ஈரோடு
பஸ் ஸ்டாண் டில், பஸ் இல்லாமல் பரிதவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை
தொகுதியிலும், 1,953 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு
பணியாற்றிய, 9,376 ஓட்டுச்சாவடி அலுவலர், தேர்தல் அலுவலர் மற்றும்
ஊழியர்கள், 23ம் தேதி தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டனர். தேர்தல் பணியில்
ஈடுபடும் ஊழியர்கள், சொந்த தொகுதியில் பணியாற்ற அனுமதிப்பதில்லை.
இதனால், "ரேண்டம் சிஸ்டம்'
அமைப்பில், தொகுதி விட்டு தொகுதிக்கு மாற்றப்படுகின்றனர். இந்த லோக்சபா
தேர்தலிலும், ரேண்டம் சிஸ்டம் அடிப்படையில் தொகுதி விட்டு தொகுதிக்கு
மாற்றப்பட்டனர். பல ஆயிரம் தேர்தல் அலுவலர்கள், பஸ் வசதி இல்லாத
இடங்களுக்கு, பணி அமர்த்தப்பட்டனர். இதில், 70 சதவீதம் பேர், பெண்களே
நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் பணி, 24ம் தேதி மாலை, ஆறு மணிக்கு
முடிந்து விட்டாலும், ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பெட்டி எடுத்து செல்லும்
வரை, அங்கு பணியாற்றும் அனைவரும் இருக்க வேண்டும், என,
கட்டாயப்படுத்தப்பட்டதால், நடு இரவு, இரண்டு மணி வரை, ஓட்டுப்பெட்டியை
சேகரிக்கும், மண்டல அலுவலர்கள் வராமல் போனதால், நடு இரவு வரை தேர்தல்
பணியில் ஈடுபட்ட பெண்கள், ஓட்டுச்சாவடியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும், ஓட்டுச்சாவடியில் தலைமை தேர்தல் அலுவலர் மட்டும் இருந்தால்
போதும்.
பிற அலுவலர்கள், எட்டு மணிக்கு தேர்தல் பணி
முடிந்ததும், பணியில் விடுவிக்கப்படுவார்கள், என கூறப்பட்டது. இதை நம்பிய
பெண்கள் முன்னேற்பாடு, ஏதும் இல்லாமல், இருந்ததால், நடு இரவு வரை
காத்திருக்க வைக்கப்பட்டதால், ஓட்டுச்சாவடியில் இருந்து வெளியூர் செல்ல
வேண்டியவர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். கொடுமுடி, மொடக்குறிச்சி, சிவகிரி,
காங்கேயம், கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர் போன்ற பகுதியை சேர்ந்தவர்கள்,
அதிகாலை, ஐந்து மணி வரை, ஈரோடு பஸ் ஸ்டாண்டில், ஆயிரக்கணக்கான பெண்கள்,
பரிதவித்தனர். தேர்தல் அன்று, இரவு, எட்டு மணிக்குள் பணியில் இருந்து
விடுவிக்க வேண்டும், என்ற பெண் ஊழியர்களின் கோரிக்கையை, யாருமே கண்டு
கொள்ளாமல் போனதால், ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் பெரும் பாதிப்புக்கு
தள்ளப்பட்டனர்.
If presiding officer is also a lady what will happen. If all other staffs are relieved before 8 pm how will a po lady alone manage upto 2 or 3 am.
ReplyDelete