Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரம்பு மீறிய வருவாய் துறை; வறுத்தெடுத்த ஆசிரியர்கள்

 
          சிவகங்கையில் தேர்தல் பணியில் கிட்டதட்ட 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் 20 சதவீத ஆசிரியர்கள் சமுதாய கூடத்தில் அவசர உதவிக்காகவும், மாற்று பணிக்காகவும் தடுத்து வைக்கப்பட்டனர். இதில் 80 சதவீதம் பெண் ஆசிரியர்கள். இச்சமுதாய கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க கூட வசதி செய்து தரப்படவில்லை. இருந்தாலும் கூட தேச பணிக்காக அனைத்தையும் பொறுத்து கொண்ட ஆசிரியர்கள் பொறுமை காத்தனர்.
 
           இதில் வருவாய் துறையை சார்ந்த ஒரு ஊழியர் தன்னை இந்திய தேர்தல் ஆணையர் போல் கற்பனை செய்துகொண்டு மைக்கில் வார்த்தைகளை உபயோகிப்பதும், பெண் ஆசிரியர்களை மிரட்டுவதும் என்ற தோரணையில் நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் பெண் ஆசிரியர்களை பார்த்து உங்களுக்கு கொடுக்கும் மதிப்பூதியம் தண்டம் என்றும் வாய் கூசும் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார். தகவலறிந்த நாம் அந்த குறிபிபட்ட நபரை தேடியபொழுது ஜீப்பில் மாயமாகி விட்டார். அதன் பின் வந்த அலுவலர்களிடம் நாம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அந்த அநாகரிகமான நபரை காப்பற்ற வருவாய் துறை தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தியது. நம்முடைய கோபம் அதிகமானது. அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக மண்டபத்திற்கு வெளியில் கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். நம்மைப்பற்றி தரக்குறைவாக பேசிய வருவாய் அலுவலர் உடனடியாக இங்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தோம். நம்மை எள்ளி நகையாடிய அந்த நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் போரடிக் கொண்டிருந்த வேளையில் மேல்நிலைப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இது யாருக்கோ நடந்த சம்பவம் போல் மதிப்பூதியம் பெறுவதில் முனைப்பு காட்டியது அங்கு குழுமியிருந்த ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செய்தி உடனடியாக செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பானது. நம்முடைய போராட்டம் மிக கடுமையானது. கோஸங்கள் விண்ணை பிளந்தது. நிலைமை கட்டுங்கடங்காமல் போகவே சிவகங்கை தாசில்தார் உடனடியாக விரைந்து வந்தார். தாசில்தாரும் தன்னுடைய சகாவை காப்பாற்றும் விதமாக விசயத்தை மழுங்கடிப்பு செய்ய முயன்றார். கோபமுற்ற நாம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டோம். பெண் ஆசிரியர் சகோதரிகளும் குறிப்பாக சிங்கம்புணரி பெண் ஆசிரியர்களும் தாசில்தாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் மருதுபாண்டியர் வளாகம் முழுவதும் எதிரொலித்து. இறுதியாக தன்னுடைய துறையின் தவறை உணர்ந்த அதிகாரி இந்த குறிபிட்ட நபர் காரைக்குடி அவசர தேர்தல் பணிக்காக சென்று விட்டதாகவும் அவருக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். அதன் பின் மாவட்ட தேர்தல் பணி அலுவலரும் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். அந்த நபருக்கு உடனடியாக விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார். பின்னர் ஆசிரியர்கள் கலைநது சென்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை அடிமை போல் நடத்துவதை வருவாய்துறை வருங்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.




2 Comments:

  1. மிக சரியான கருத்து,வருவாய் துறையினரின் ஆணவம் இந்த முறை எல்லை மீறி விட்டது ,ஆசிரியர்களின் பொறுமையை மிகவும் சோதித்து விட்டனர் இதை கண்டும் காணமல் விட்ட பெண் ஆசிரியர்கள் சுயநலவாதிகள் அடுத்த தேர்தலுக்குள் இக்குறைகள் நீங்கி ஆசிரியர்கள் மதிக்கப்படவேண்டும், மேலும் நமது கடமை உணர்ச்சியும் பொறுப்பும் துளியும் குறையக்கூடாது ,நாட்டுக்கு உழைக்கிறோம் .

    ReplyDelete
  2. மிக சரியான கருத்து

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive