அரசு சுற்றுலாத் துறையின், ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி கல்லூரியில், துறைத் தலைவர் பதவியே இல்லாதபோது, அதில் அனுபவம்பெற்றவர்களைத் தான், முதல்வர் பதவியில் நியமிக்க முடியும் என்ற அரசின் உத்தரவு,விதிகளுக்கு புறம்பானது. துறைத் தலைவர் பதவியை, அரசு உருவாக்க வேண்டும் என,மதுரை ஐகோர்ட் கிளை, ஆலோசனை வழங்கி உள்ளது.
பதவி உயர்வே இல்லை : திருச்சி துவாக்குடியில், தமிழக அரசு சுற்றுலாத்
துறையின், ஓட்டல் நிர்வாகம்கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரி உள்ளது. இங்கு
பணிபுரியும் கார்த்திகேயன், பாஸ்கரன் தாக்கல் செய்த மனு:எங்களுக்கு போதிய
கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளது. பல ஆண்டுகளாக, பதவி உயர்வு
வழங்கவில்லை.முதல்வர் பணி நியமனம் தொடர்பாக, அரசு 2013ல் அறிவிப்பு
வெளியிட்டது.இதில், எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பின், துறைத்
தலைவர்களாக, ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம்இருந்தால் தான், முதல்வர் பதவிக்கு
முன்னுரிமை வழங்க முடியும் என, உத்தரவிட்டனர். இதை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விதிமுறைக்கு புறம்பானது : மனுவை விசாரித்த, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு:கல்லூரியில், துறைத் தலைவர் (எச்.ஓ.டி.,) பதவி என்பதே இல்லை. இந்நிலையில், தகுதியான ஒருவரை,எப்படி முதல்வர் பதவிக்கு நியமிக்க முடியும்? அரசின் அறிவிப்பு, தேசிய ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி கவுன்சில் விதிமுறைகளுக்கு புறம்பானது. துறைத் தலைவர் பதவியை உருவாக்க, சுற்றுலா,கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்துகிறேன்.அப்படிச் செய்தால் தான், அனுபவம் வாய்ந்தவர்கள், முதல்வர் பதவிக்கு வர முடியும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...