பணி நீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்
ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு
மேல்நிலைப் பள்ளி பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர் கூட்டமைப்பினர்
தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலர்
ஜி.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: வேலூரில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள்
கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த ஜூலை மாதம் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி
பணிநீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு உச்சநீதி மன்றம்
சாதகமான தீர்ப்பை அளித்தது.
அதன்படி 9 ஆண்டுகள் தாற்காலிகமாக ரூ.1000
ஊதியத்திலும், நான்கரை ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான முறையான
ஊதியத்திலும், பணியாற்றி 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ள காரணத்தால் பணிநீக்கம்
செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
ரத்து செய்யப்பட்ட பதிவை புதுப்பித்து மீண்டும் எங்களை மட்டும் பதிவு
மூப்பு அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வரை சந்தித்து
எங்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கோரிக்கை வைப்பது எனவும், வரும்
மக்களவைத் தேர்தலில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின்
குடும்பத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதோடு, நண்பர்களிடம் அதிமுகவுக்கு
ஆதரவு திரட்டுவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Hello Supreme court Cleared to say to appoint seniority. All bed CS. NOT ONLY 652 People. If you are in seniority you get job. Inthamathiri Jalra Poduratha Nippatunga. Amma is Clever. She noted in her mind in 2006 You announed to support DMK. So u got job. It is the World history Writting exam 10.am the result announced 5 pm. All r appointed. In this time u say to support ADMK. Neengallam Pilaikiravanga. Konjam Yosanaipanni paru Thanmanthaivikkira. Nanga Eppavuma ADMK kkuthan Support. Nanga Eppavume Maramattom
ReplyDelete