அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துவிட்ட கூகுள் கண்ணாடிகள்-இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.
நியூயார்க்: தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள்
கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல்
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஉலகில் அறிவியலில்.
புரட்சி என்பது,
மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின்
மூலம் உலகின்
எல்லா தகவல்களையும்
ஒரு நொடியில்
பெற்று விட
முடிகிற அளவுக்கு
அறிவியல் முன்னேறி
உள்ளது.
அதே போல் ஒரு
நாட்டின் மூலை
முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க
முடியும். ஆரம்பத்தில்
மிக பிரமாண்டமாக
இருந்த கம்ப்யூட்டர்கள்
படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன்
அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள்
நிறுவனம் வடிவமைத்துள்ள
கண்ணாடி, உலகத்தை
நம் கண்ணுக்கு
அருகிலேயே கொண்டு
வந்து நிறுத்தி
உள்ளது. இதுவரை
சோதனை முயற்சியாக
செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று
முதல் அமெரிக்காவில்
விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு
செய்துள்ளது.
தற்போது 1500 டாலர் விலையில்
கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து
கொண்டு நாட்டின்
எந்த பகுதியில்
இருந்து கொண்டு
வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம். இனி
கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை
சொல்லி விடலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...