விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், தேர்தல் பயிற்சி
வகுப்பிலும் பங்கேற்க வேண்டியிருப்பதால், ஒரே நாளில் இரண்டு பணிகளை
செய்யமுடியாமல் திணறுகின்றனர்.
கடந்த 10ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி,
திருப்பூர் விவேகானந்தா வித்யாலயாபள்ளியில் நடந்து வருகிறது. 1,360
ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலையுடன் இப்பணியை முடிக்க
திட்டமிட்டிருந்தது. 15ம் தேதி, தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டதால்,
விடைத்தாள் திருத்தும் பணி தடைபட்டது. அதனால், கால நீட்டிப்பு செய்து,
21க்குள் விடைத்தாள் திருத்தும்பணியை முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.வரும்
24ல், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள்
மற்றும் நிலைய அலுவலர்களாக, மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 160
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், தற்போது
விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம்,
பொள்ளாச்சி பெண்கள் அரசு பள்ளியிலும், சூலூர் ஆர்.வி.எஸ்., கல்லூரியிலும்
நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருமாறு, ஆசிரியர்களுக்கு
எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கக்கூடாது
என்பதற்காக, காலையில் ஒரு பிரிவாகவும், மதியம் ஒரு பிரிவாகவும் பயிற்சி
வகுப்பில் பங்கேற்கச் செல்லுமாறு, கல்வித்துறை அதிகாரிகள்
ஆசிரியர்களுக்குஅறிவுறுத்தினர்.அதன்படி, குறிப்பிட்ட பயிற்சி மையங்களுக்கு
சென்ற ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது; பயிற்சிக்கான எவ்வித
முன்னேற்பாடும் செய்யாத நிலையில், ஆசிரியர்கள் மணிக்கணக்கில்
காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.
ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்ததையடுத்து, இரண்டு மணி நேரம் தாமதமாக, பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்பின், மாலை 4.00 மணியளவில் விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு வந்த ஆசிரியர்கள், இரவு 7.30 மணி வரை இருந்து, விடைத்தாள்களை திருத்தி விட்டுச் சென்றனர்.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "தேர்தல் பயிற்சி வகுப்பை நடத்த, முறையாக ஏற்பாடு செய்வதில்லை; விடைத்தாள் திருத்தும் பணிக்கு இடையே, பயிற்சிக்கு சென்றால், ஆசிரியர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கின்றனர்."கழிப்பிடம், குடிநீர், உட்கார இருக்கை வசதி கூட சரியாக இருப்பதில்லை. பயிற்சியும் சொதப்பலாக உள்ளது. பயிற்சி வகுப்புக்கு சென்று வந்த அலுப்பில், மன உளைச்சலில் விடைத்தாளை திருத்தும்போது, மாணவர்களுக்கான மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது,'

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...