Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது: தேர்வர்கள் ஆவேசம்


     முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரசு உத்தரவு :

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது.

இதில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்குமட்டும், இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்துள்ளது. 600க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர்கள், பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம்உள்ளிட்ட, பல முக்கிய பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும்வெளியிடவில்லை.இதைக் கண்டித்து, முதுகலை தேர்வர்கள், நேற்று காலை, சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள், மேற்கண்ட பாடங்களுக்கு, இறுதி தேர்வு பட்டியலை, உடனடியாக வெளியிட வலியுறுத்தினர்.

பணி நியமனம் :

இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: ஒரே போட்டித் தேர்வில், குறிப்பிட்ட பாடத்தை சேர்ந்தவர்கள் மட்டும், பணி நியமனம் பெற்று உள்ளனர். எங்களுக்கு இன்னும், தேர்வு இறுதி பட்டியலையே வெளியிடாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை, உயர்நீதிமன்றத்தில், 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்' என, தெரிவித்தனர். ஆனால், எங்களுக்கு தெரிந்து, வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. வேண்டுமென்றே, டி.ஆர்.பி., இழுத்தடிப்பு வேலையை செய்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசு, இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க, முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.




1 Comments:

  1. We never change our +2,Degree,&BEd Marks(Already studied Candidates Before 2012) So Weightage System will create lot of problems,
    for the example already One who got low level marks in his +2 Degree and BEd.
    But even though he get more marks in his TET Exam,He can not get the Job.
    So TRB may may consider another way
    for the example TET Marks' weightage+Employement Seniority+ Date of Birth

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive