மத்திய அரசு வழங்கும் இடைநிற்றல் கல்வி
உதவித்தொகை பெறுவதில் இரு கல்வியாண்டு மாணவிகளுக்கு சிக்கல் உள்ளது.
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலத்திலும் பெண்கள் இடைநிற்றல் கல்வியை தடுக்க
9ம் வகுப்பு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு பிளஸ் 2 வரை ஆண்டுக்கு
தலா ரூ.3 ஆயிரம் சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்குகிறது. 2008ம் ஆண்டு
முதல் வழங்கப்படும்
இத்தொகையை பெற ஒவ்வொரு
மாணவிக்கும் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க செய்து, அதற்கான எண்களை
கடந்த கல்வியாண்டு வரை சேகரித்து, கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிக்
கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பினர்.
2009-10, 2010-11ம் கல்வியாண்டு மாணவிகளுக்கு
மட்டும் இடைநிற்றல் உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த முடியாத நிலை
உள்ளது. சம்பந்தப் பட்ட வங்கியின் ஐ.எப்.எஸ். கோடு இன்றி ஏற்ற முடியாமல்,
மீண்டும் இரு கல்வியாண்டுக்குரிய மாணவிகளின் வங்கி சேமிப்பு கணக்குடன்
ஐ.எப். எஸ்., கோர்டுகளை வாங்கி அனுப்ப பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
2009-10, 2010-11ம் கல்வி யாண்டில் 9ம் வகுப்பு
பயின்ற சில மாணவிகளை தேடி பிடிக்கும் பணியில் கல்வித்துறை ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். சிலர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறி சென்றதால், அவர்களை
தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என, கல்வித்துறை ஊழியர்கள்
புலம்புகின்றனர்.
9ம் வகுப்பு ஓரிடத்திலும், தொடர்ந்து அடுத்த
வகுப்பை வேறு மாவட்டத்திலும் படிக்கும் மாணவிகள் ஏற்கனவே படித்த பள்ளிக்கு
உட்பட கல்வித்துறை அலுவலகங்களை அணுகி தங்களது வங்கி கணக்கு, ஐ.எப்.எஸ்.,
கோடு குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என, கல்வித்துறையினர்
கேட்டுக்கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...