தபால் ஓட்டு போடாதவர்கள் மற்றும் செல்லாத ஓட்டு
போடுபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில்
மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டசபை
தொகுதிக்குட்பட்ட, சென்னவராயன்கோட்டை பகுதியைச் சேர்ந்த வீரசேனன் என்பவர்,
தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின், 39
லோக்சபா தொகுதிகளில், இம்மாதம் 24ல், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 2.68
கோடி ஆண்கள், 2.68 கோடி பெண்கள், 2,996 திருநங்கைகள் ஓட்டளிக்க உள்ளனர்.
இதற்காக, 60 ஆயிரத்து 418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சீட்டு முறை ரத்து செய்யப்பட்டு, இயந்திரம் மூலம் ஓட்டளிக்கும் முறை
வந்த பிறகு, செல்லாத ஓட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு மையங்களில்
பணிபுரியும், லட்சக்கணக்கான அலுவலர்கள் போலீசார் மற்றும் ராணுவத்தினர்,
தபால் மூலம் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் செலவு,
தபால் ஓட்டு தயாரித்தல் போன்றவற்றிற்காக, தேர்தல் கமிஷன் பல கோடி ரூபாயை
செலவிடுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர், படிவம் 12ஐ பூர்த்தி செய்து,
தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுத்து, தபால் ஓட்டைப் பெற்று, அதை
பூர்த்தி செய்து ஓட்டளிக்க வேண்டும். இப்பணியை முறையாக செய்யாதவர்கள்,
செல்லாத ஓட்டு பதிவு செய்பவர்களுக்கு எதிராக, தேர்தல் கமிஷன் நடவடிக்கை
எடுக்க வேண்டும். ஏனெனில், ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை, தபால்
ஓட்டுகள் தான் நிர்ணயம் செய்கின்றன. இவ்வாறு, மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...