Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிளினீங்' பணியில் மாணவர்கள்: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

           பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை சுத்தம் செய்யும், பணியில் மாணவர்களை ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
             மாநிலம் முழுவதும், அரசு பள்ளிகளில், அடிப்படை பணியாளர் காலி பணியிடம் அதிகரித்து வருவதால், பல்வேறு இடங்களில், மாணவர்கள் பணியாளராகும் அவலம் நீடித்து வருகிறது.

              கடந்த 25 ஆண்டுக்கு முன்பு, இந்த அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற பணியாளருக்கு, பதில் புதியதாக பணியாளர்கள் நிரப்பபடுவதில்லை. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக, அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடுநிலை பள்ளிகளில், சமீபத்தில் 40 சதவீத பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடக்க பள்ளிகளில், 90 சதவீத பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

              இதனால், பல இடங்களில், மாணவர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் நிலைக்கு கட்டாயப் படுத்தப்படுகின்ற னர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள், வகுப் பறைகளை சுத்தம் செய்வது குறித்து, படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

               இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ""பள்ளி மாணவர்களை, வகுப்பறை, டாய்லெட் மட்டுமன்றி, மற்ற வேலைகளுக்கும், பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'', என கூறப்பட்டுள்ளது.




1 Comments:

  1. ஏசி அறையில் அமர்ந்துகொண்டு உத்தரவுகள் இடுவது எளிது.அதிகாரிகள் தங்களது பணியைசரியாகசெய்து விட்டு உத்தரவுகள் இடுவதே சிறந்தது.வகுப்பறை என்பது மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை அறிவையும் புகட்டும் இடமாகும்.தலைமையேற்கும் பண்பு,விட்டுக் கொடுத்தல்,தன்முறைவரும்வரை காத்திருத்தல்,பிறருக்கு உதவிடுதல்,போன்றவற்றை கற்பிக்கும் இடம் வகுப்பறைபயல்லவா! வகுப்பறை சுத்தம் செய்தல் என்பது காலஅட்டவணையின் அடிப்படையில் அனைத்து மாணவர்களும் பங்கெடுக்கச் செய்து தங்கள் இடத்தை தாங்கள்தான் சுத்தம் செய்ய்வேண்டும் என்ற ஒழுங்கைகற்றுக்கொள்கிறான்.இதேபோல் தான் மற்ற பணிகளும்.சரி அரசின் உத்தரவில் வகுப்பறை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கூறுகிறது.மாணவர்கள் அமரும் இடத்தை மணவர்களே சுத்தம் செய்வது மானவர்களூக்கு இழிவா.எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு என்றால் மாணவர்கள் பள்ளியில் எதை கற்றுக்கொள்ள போகிறார்கள்.ஆசிரியர்களுக்கு ஒரு உதவியென்றால் மாணவர்கள் உடனே செய்வார்கள் இந்த பண்புதான் பின்னர் சமூகத்திற்கு பயன்படும் ஆசிரியர்களின் சொற்கேலாதவன் சமூகத்தில் யாருடைய சொல்லுக்கு கட்டுப்பட போகிறான்.ஆசியர்களால் மாணவர்களூக்கு கொடுக்கப்படும் ஒவ்வொருபணியும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாகத்தான் இருக்கும்.ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் சொந்த வேலைக்காக பணிப்பது தவறுதான்.ஆசிரியர்களின் கழிவறையை மாணவர்களைக்கொண்டு சுத்தம் செய்ய சொல்லக் கூடாது. மாணவர்களின் கழிவறையை மாணவர்களால் ஒரு வாளி தண்ணீர் ஊற்றுவதால் மாணவர்களுக்குத்தானே நன்மை.பள்ளிகளில் துப்புறவு பணியாளர் இருந்தால் அவர்கள் சுத்தம் செய்வார்கள்,அப்படி பணீயாளர் இருக்கும் இடங்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால் ஆசிரியர்களுக்கு தண்டணை கொடுக்கவேண்டும்.அரசு எத்தனை பள்ளிகளில் துப்புரவுபணீயார்களை பணியமர்த்தி உள்ளது.சமீபத்தில் அரசு கல்விச்செயலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒருதகவல் கொடுத்துள்ளது,12,000 க்கும் மேற்பட்ட தொடக்க,நடு நிலை,உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் துப்புரவுபணீயாலர்களை பனியமர்த்தி உள்ளதாக.அப்படியானால் அவர்கள் அனைவரும் எங்கே?அரசு செயலரே முதலில் அவர்களை கண்டிபிடித்து பள்ளிகளில் பணி அமர்த்துங்கள் .பின்னர் உங்கள் உத்தரவுகளை நடைமுறை படுத்துங்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive