அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே அல்லது ஜூன் மாதம் இடமாறுதலுக்கான
கலந்தாய்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வுமுறை புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி,
இடமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள்
மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு காலியிடங்கள் குறித்த
பட்டியல் ஆன்லைனில் காண்பிக்கப்படும். பணிமூப்பு, முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்கள்
ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு விருப்பமான பள்ளியை தேர்வுசெய்துகொள்வார்கள்.
அவர்களுக்கு அங்கேயே இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு விடும். கடந்த ஆண்டைப்
போலவே, இந்த ஆண்டும் ஆசிரியர் இடமாறுதலுக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறையை
நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இந்த கலந்தாய்வை
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி முடிவடைந்ததும். மே மாதம்
இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
Which is the last date for apply transfer?
ReplyDelete