தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் தேர்தல் பணியில்
ஈடுபடுத்தப்பட்டிருக்கும் போலீஸாரும் அரசு ஊழியர்களும் தபால் மூலம் வாக்கு
செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீண்குமார் கூறினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர்
கூறியதாவது: வெளிநாட்டு இந்தியர் வெளிநாட்டில் பணிபுரியும் அல்லது
படிக்கும் இந்தியர்கள் 115 பேர் தமிழக வாக்காளர் பட்டியலில்
இடம்பெற்றுள்ளனர்.
அவர்களை என்.ஆர்.ஐ.
வாக்காளர்கள் என்றழைப்பது தவறாகும். தாங்கள் வசிக்கும் வெளிநாட்டின்
குடியுரிமை பெறாதவர்கள் மட்டுமே இங்கு வாக்காளர் பட்டியலில் இடம்பெற
முடியும். புதிய நடைமுறை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார்,
தங்களது தபால் வாக்குகளைச் சரியாக செலுத்த முடிவதில்லை என்ற பிரச்சினை
முன்பு எழுப்பப்பட்டது. அதை சரிசெய்வதற்கு கடந்த தேர்தலின்போது புதிய
நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதை இம்முறை இன்னும் சிறப்பாக செயல்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும்
போலீஸாருக்கு அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது ஆணையர், தபால்
வாக்குக் கான படிவங்களை வழங்குவார்கள்.
தேர்தல் பணிக்குப் புறப்படும்
முன்பாக போலீஸாருக்கு பயிற்சி முகாம் நடத்தப்படும். அந்த முகாம்களில் தபால்
ஓட்டுகளை அவர்கள் செலுத்தலாம். அதன்பிறகு, தேர்தல் பணிக்கு அவர்கள்
புறப்படலாம். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், இதே முறையில்
தேர்தல் பயிற்சியின்போது தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இதுபோல் செலுத்தப்படும் தபால் வாக்குகள் அடங்கிய
பெட்டிகளை, அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி சீலிட்டு
பாதுகாத்து வைப்பார். வாக்கு எண்ணும் நாளன்று அந்த பெட்டிகள்
திறக்கப்படும். கடமை தவறினால் நடவடிக்கை தேர்தல் பணியில் ஈடுபடும்
அலுவலர்கள், தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வழியுண்டு. அத்தகைய ஊழியர்கள் மீது மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டம் 134-ன் கீழ் நடவடிக்கை எடுக்க தேர் தல் துறைக்கு
அதிகாரம் உள்ளது. இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...