வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்படும் என்று இந்திய வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வங்கிகளின் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நிர்வாக மேம்பாடு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இது 1985ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2 நாட்கள் விடுமுறையை மத்திய அரசு ஊழியர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
ஆனால் வங்கி ஊழியர்கள் மட்டும் இந்த சலுகையை அனுபவிக்க கூடாது என்று அரசு மறுப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. வங்கித்துறையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன மாற்றங்கள் மூலம் ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங் என வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளின் செலவினங்களை கருத்தில் கொள்ளும் போது வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது செலவின அடிப்படையில் பயனுள்ளதாக இருக்கும். இதை மத்திய நிதி அமைச்சகத்திடம் தெரிவித்து வாரத்தில் 5 நாள் மட்டுமே வங்கிகள் இயங்க அனுமதி கோரப் படும். இவ்வாறு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...