தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சந்தாதாரர்களாக
உள்ளவர்கள்,தொழிலாளர் பென்ஷன் திட்டம் 1995ன் கீழ், 58 வயது
பூர்த்தியானதும் பென்ஷன் பெற முடியும்.
இத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள், 58 வயதை பூர்த்தியானதும் பென்ஷன்
பெறுவதற்கு தகுதியுள்ளது என்ற தகவலை, இ.பி.எப்.ஓ., என்ற தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி அமைப்பு தகவல் தெரிவிக்கும். பென்ஷன் திட்டத்தின் கீழ்,
பென்ஷன் வழங்குவதில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க, 123 கள அதிகாரிகளுக்கு,
இ.பி.எப்.ஓ., உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 'சந்தாதாரர்களில், 58
வயதானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் வேலை பார்க்கும்
நிறுவனங்கள் மூலம் கடிதம் அனுப்பப்படும். இவர்கள், விண்ணப்பித்து, பென்ஷன்
மற்றும், பி.எப்., தொகையை பெற்று கொள்ளலாம்,' என இ.பி.எப்.ஓ.,
அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...