பகுதி நேர ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 548 பேரை பணி நியமனம் செய்வோம் என்றும்,
தொழில் ஆசிரியர் தேர்வுக்கு காத்திருக்கும் 55 ஆயிரம் பேரை காக்கும்
வகையில், மீண்டும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி தேர்வை நடத்துவோம் என உறுதி
அளிக்கும் கட்சிக்கு, ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள்
இது தொடர்பாக தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், தமிழகத்தில் 16 ஆயிரத்து 548 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வாரத்திற்கு 3 நாள் அரை நேர பணி என, மத்திய அரசின் நிதியில் இருந்து தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும், பகுதிநேர ஆசிரியர்களை அனைவருக்கும் இடைநிலை கல்வி என்ற திட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அடிப்படை ஊதியமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேல் பகுதி நேரஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நிறுத்தப்பட்ட தொழில் ஆசிரியர் பயிற்சி
கடந்த 2007–ம் ஆண்டு முதல் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி(டி.டி.சி.) நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சங்கம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, ‘2013–14–ம் கல்வி ஆண்டு வரை தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சிக்கு தடை ஆணை விதிக்கப்பட்டு உள்ளது என்று தொழிற்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்’. இதனால் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை எதிர்பார்த்து காத்திருக்கும் 55 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.இதேபோல் 1935–ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, ஓவியம், தையல் மற்றும் இசை ஆகிய துறைகளுக்கு தொழில்நுட்ப தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு(2013) இந்த தேர்வு திடீரென நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதால், கடந்த ஆண்டு இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்று அரசு தேர்வுகள் துறை விளக்கம் அளித்துஉள்ளது.
71,548 பேரின் ஓட்டு யாருக்கு?
இந்தநிலையில் கடந்த 2007–ம் ஆண்டு முதல் அரசு தொழில்நுட்ப தேர்வை எழுதிவிட்டு, தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சிக்கு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். இந்த 3 மாதகால தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை முடித்தால், கலை ஆசிரியர் பணி கிடைக்கும். இந்த கோரிக்கைகளை ஏற்று, அதை நிறைவேற்றுவோம் என தேர்தல் அறிக்கை வெளியிடும் கூட்டணி கட்சிகளுக்கு, பகுதி நேரஆசிரியர்கள் 16 ஆயிரத்து 548 பேர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஓட்டுகளையும், தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை எதிர்பார்த்து காத்திருக்கும் 55 ஆயிரம் பேர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஓட்டுகளை அளித்து, ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி மொத்தம் 71 ஆயிரத்து 548 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஓட்டுகள் அளித்து, ஆதரவு அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...