Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தலில் வாக்களித்தால் பெட்ரோல் பங்கில் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி

         இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய இதற்கு மேல் வலியுறுத்த முடியாது. ஏனெனில் பிரபலங்கள், கார்பரேட் நிறுவனங்கள் பல்பொருள் அங்காடிகள் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து தரப்பும் இந்த தேர்தலில் வாக்க்காளர்கள் தங்கள் கடமையை செய்ய பங்களிப்பை அளித்துள்ளனர்.
         தேர்தல் நாளில் வாக்களித்தால் பெட்ரோல் பங்குகளில் தள்ளுபடி,தியேட்டர்களில் இலவச பாப்கார்ன் மற்றும் குளிர் பானங்கள், வணிக வளாகங்களில் இலவச கூப்பன்கள் உள்ளிட்டவைகளை இம்முறை வாக்களர்கள் பெறமுடியும்.

             அதாவது, வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்களித்தன் அடையாளமாக கையில் ”மை” இருந்தால் தேர்தல் நாளில் 50 காசு தள்ளுபடி சலுகை அளிப்பதாக டெல்லியில் உள்ள 57 பெட்ரோல் பங்க்குகள் அறிவித்துள்ளன. இந்த தகவலை அனைத்து இந்திய பெட்ரோலிய சம்மேளனம் (FAIPT) பொதுச்செயலாளர் அஜய் பன்சால் தெரிவித்தார்.

           மேலும், இந்த திட்டத்தை மும்பை ஆந்திர பிரதேசம்,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.டெல்லியில் உள்ள சில தியேட்டர்கள் மையுடன் கூடிய விரலை காட்டினால் இலவச பாப்கார்ன் தருவதாகவும் தெரிவித்துள்ளன.

           புதிய வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இது சிறந்த முறையாக இருக்கும். ஏனெனில் ஒருவர் 18 வயதை கடந்து விட்டால் வாகனம் ஓட்டுவதற்கும் வாக்களிக்கவும் உரிமை கிடைக்கும். எனவே இதை விட விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன வழி இருக்கிறது என்று பன்சால் தெரிவித்தார்.




1 Comments:

  1. தேர்தல் நாளன்று ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டியது அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive