தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரியில் 80 % வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழகம், புதுச்சேரியில்
மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.ஒரு
சில மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு தவிர பெரிய
அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என தேர்தல் ஆணைய
அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன்
வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.குறிப்பாக முதன்முறை
வாக்காளர்களான இளைஞர்கள், தங்களது வாக்குகளை செலுத்த ஆர்வம் காட்டி
வருகின்றனர்.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை
நடைபெற்றது.
தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.5 கோடியே 51 லட்சத்து 14ஆயிரத்து 867 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதற்காக மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் உட்பட ஒரு லட்சத்து 50ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்க ஏதுவாக தொள்ளாயிரத்து ஐந்து வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட்டிருந்தன.இதேபோன்று, சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இங்கு 62 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...