நாடு முழுதும் இ-கழிவுகளை அகற்றும் பணியி்ல் 4.5 லட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இ-கழிவு எனப்படும் எலக்ட்ரானிக்கழிவு
பொருட்களை அழிக்கும் பணியில் 4.5 லட்சம் இந்திய குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர்.
சுமார்10-14 வயதுடைய குழந்தைகள் இத் தொழிலில் ஈடுபட்டு்ள்ளனர். நாடு
முழுவதும் ஆண்டு ஒன்றிற்கு 15 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு இ-கழிவுகள்
உருவாக்கப் படுகி்ன்றன. நாட்டில் மிக அதிக அளவாக மும்பையில் 96 ஆயிரம்
மெட்ரிக்டன் அளவிற்கு இ-கழிவுகள் உருவாக்கப்பட்டு முதலிடத்தை
பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக டில்லி, பெங்களூரு சென்னை, கோல்கட்டா,
அகமதாபாத், ஐதராபாத், புனே போன்ற நகரங்கள் இடம் பெறுகி்னறன.
இ-கழிவுகளில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பொருட்கள் 68
சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து தொலை தொடர்பு துறை 12
சதவீதம் எலக்ட்ரி்கல்துறை 8 சதவீதம், மருத்துவத்துறை 7, வீட்டு
உபயோகப்பொருட்கள் 5 சதவீத அளவிற்கு இடம் பிடித்துள்ளது.
மேலும் இ-கழிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு
வேதிப்பொருட்களை கையாள்வதால் அவர்களுக்கு பலவித நோய்கள் உருவாகும் வாய்ப்பு
உள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...