இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.105 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 13
மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவில் தொடங்க
பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கல்வி திறனை வளர்த் தல்,இடைநிற்றலை தவிர்த் தல்,தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல்,கூடுதல் வகுப்பறைகளை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின மூலம் தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி செலவில் 13மாவட்டங்களில் மாணவியர்கள் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில்,கடலூர் மாவட்டத்தில் 3,விழுப்புரம் மாவட்டத்தில் 8,கிருஷ்ணகிரியில் 4,தர்மபுரியில் 3,சேலத்தில் 12 என மொத்தம் 44 இடங்களில் பொதுப்பணித்துறையின் மூலம் விடுதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறும் போது,தமிழத்தில் கடந்த 2009 திமுக ஆட்சியில் மாணவர்களின் நலன் கருதி இடைநிலை கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் அரசு சார்ந்த உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர் தரமான இடைநிலை கல்வி உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 இடங்களில் மாணவியர் விடுதிகளை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி வருகிற ஜூனில் தொடங்கும்‘என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...