Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாலை 3 மணிக்கு மேல், முகவர்களை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது: அலுவலர்களுக்கு எச்சரிக்கை


     வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் முகவர்களை மாலை 3 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயிற்சி முகாம்

சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியிலுள்ள 1,021 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் பற்றியும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் முதல் கட்ட பயிற்சி வகுப்பு ஜெயராம் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது.மாநகராட்சி ஆணையாளரும் சேலம் தெற்கு தொகுதி வாக்குப்பதிவு அலுவலருமான கே.ஆர்.செல்வராஜ் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து விளக்க உரை ஆற்றினார். அவர் பேசியதாவது:- சேலம் தெற்கு தொகுதியில் 24 வார்டுகளை உள்ளடக்கி 271 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,24,039 ஆண் வாக்காளர்களும், 1,25,327 பெண் வாக்காளர்களும் மொத்தம் 2,49,392 வாக்காளர்கள் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி அலுவலரும், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 1, நிலை 2, நிலை 3 ஆகிய நான்கு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முந்தைய நாளே...

தேர்தலுக்கு முதல் நாளான 23-ந் தேதி பகல் 12 மணிக்கு, உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாடிக்கு சென்று முன்னேற்பாடுகளை கவனிக்க வேண்டும். உங்கள் பணியை தேர்தல் பார்வையாளர்கள், உதவி பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.வாக்குப்பதிவிற்கு முந்தய நாள் நாம் செய்ய வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின்போது செய்யவேண்டிய பணிகள், வாக்குப்பதிவிற்கு பின்பு செய்யவேண்டிய பணிகள் ன்று கட்டமாக பிரித்து பயிற்சி வழங்கப்படுகிறது. வாக்குப்பதிவிற்கு முதல் நாள் வாக்குப்பதிவிற்காக அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் படிவங்களை சரிசெய்து, படிவங்களை பூர்த்தி செய்து தயார்நிலையில் வைக்க வேண்டும். வாக்குப்பதிவு அன்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில் செய்து காண்பித்து உரிய படிவத்தில் கையெழுத்து பெற வேண்டும்.

முகவர்களை வெளியே செல்ல அனுமதிக்ககூடாது

வருகிற 24-ந் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவை தொடங்கி மாலை 6 மணிக்கு முடிக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரம் முடிந்தும் சரியாக 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். மாலை 3 மணிக்கு பிறகு முகவர்கள் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது.

வாக்குப்பதிவின் ரகசியத்தன்மை காக்கப்படுவது உறுதி செய்ய வேண்டும். 100 மீட்டர் சுற்றளவிற்குள் எந்த அரசியல் கட்சி விளம்பரமும் இருக்க கூடாது.கடைசி பயிற்சியின்போது உங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சாவடியின் விவரத்தை தெரிவிப்பார்கள். வாக்குச்சாவடியின் அலுவலரின் பெயர், தொலைபேசி எண், மண்டல அலுவர்களின் பெயர், தொலைபேசி எண், ஆகியவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு கருவியை ‘சுவிட்ச் ஆப்‘ செய்துவிட்டு மூடி ‘சீல்‘ வைக்க வேண்டும். உரிய படிவங்கள் மற்றும் பதிவேடுகள் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும். தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார். முகாமில் செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, மோகன், லலிதா, சிபிசக்ரவர்த்தி, உதவி ஆணையாளர் பிரித்தி, முன்னாள் உதவி ஆணையாளர் தங்கவேல் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சியை வழங்கினர்.

இதுபோல சேலம் மேற்கு தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சோனா பொறியியல் கல்லூரியிலும், சேலம் வடக்கு தொகுதியிலுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மாநகராட்சி கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive